Sunday, 13 July 2014

அம்மா என்றால் ஆரம்பம்.




அம்மா என்றால் ஆரம்பம்.

அம்மா எந்தன் முதல் பேச்சு,
ஆரம்பம் உந்தன் அழைப் பாச்சு.
இயற்கை அன்பு அவதாரமே!
இறைவி நீ யென்ஆதாரமே!

உயிரின் இயக்கம் மூச்சு நீ!
உடலெனை வடித்த சிற்பி நீ!
உன்னை உணவு  ஆக்கி நீ!
என்னைப் படைத்த சக்தி நீ!

எண்ணும் எழுத்தும் ஈந்தாய் நீ!
கண்ணும் கருத்தும் தேர்ந்தாய் நீ!
பேசும் பேச்சுப்  பழக்கம் நீ!
பாசை அழகுத்  தமிழும் நீ!

ஐயம் தீர்த்த ஆசான் நீ! 
மெய்யாம் கீர்த்தி ஞானி நீ!
ஐந்திலே வளைத்த பூர்த்தி நீ!
ஆக்கம் நிமிர்த்தாய் நேர்த்தி நீ!

அருமருந்து அமிர்தம் தந்தாய்!
வரும் பிணிக்குத் தடை விதித்தாய்!
பசித் தழுத முதல்க் குரலை
இரசித் தணைத்து முத்தம் தந்தாய்!
 
ஒலியும் மொழியும் அம்மா நீ!
ஒளியும் வழியும் அம்மா நீ!
வாழ்வும் வாழ்த்தும் அம்மா நீ!
யாவும் ஆக்கம் அம்மா நீ!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment