Tuesday, 4 March 2025

கமழுந்தமிழே

கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!

தமிழ்மகளேதமிழ்மகளேவா!வா!
கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!
தமிழீழம் மலர்ந்ததென்றே வா!வா!
தமிழரிங்கு தலை நிமிர்ந்தோம் வா!வா!

தமிழாளுந் தனியரசி வா!வா!
தரணிக்கு வல்லரசி வா!வா!..
அமிழ்தமே இலக்கியமே வா!வா!
அம்மா புரட்சித் தலைவியே வா!வா!

பெண்ணினப் பெருமையே வா வா!
பெண்ணிலை உரிமையே வா வா!
சுய உதவிப் பொருளே நீ வா வா!
தயவொளி அருளே நீ வா வா!

பட்டினியை ஒழித்தவளே வா வா!
பிச்சையவலம் முடித்தவளே வா வா!
தொட்டில்த்திட்டம் கண்டவளே வா வா!
தாய்க்குலத்தைக் காத்தவளே வா வா!

அனாதை சொல்லழித்தாய் வா வா!
அவலையற்கு வாழ்வளித்தாய் வா வா!
மழலையன்பில் மகிழ்பவளே வா வா!
தலைவராட்சி தொடர்பவளே வா வா!


புரட்சியாரின் வாரிசே  வா!வா!
வறுமையிருள் விடியலே  வா!வா!
குலமுயர்த்துங் கலைமகளே வா!வா!
நலமருளும் காவேரியே வா!வா!

ஒற்றுமையின் உணர்வே நீ வாவா!
பற்றுணர்த்துந் தாயே நீ வா!வா!
மாற்றாருந் தொழுவோளே வா!வா!
வேற்றுமை யொளித்தோளே வா!வா!

காற்றான கருணையே நீ வா!வா!
ஊற்றான உரிமையே நீ வா!வா!
ஆற்றான அம்மா நீ வா!வா!
ஊற்றினோம்  பூமழை நீ  வா!வா!

.கொ.பெ.பி.அய்யா.








நல்லவேளை.

நல்ல வேளை.

நல்ல வேளை நாம் கண்டு கொண்டோம்  
நல்லவர் எம்ஜியாரைக்
கொண்டு விட்டோம்
அவரில்லை யென்றால் நாடென்ன கதியோ
நெஞ்சம் அஞ்சுதே ஐயகோ!ஐயகோ!

விவசாய பூமி வில்லாக்கள் ஆச்சு.
பசுமைகள் மறைஞ்சி பாடழிஞ்சி போச்சு.
விடியாத இருளில் விளங்காத தூரம்,
அடையாத ஊருக்கு முடியாத பயணம்.

சரியான நேரம் சரியாக வந்தார்.
இருளை விரட்டி விடியலைத் தந்தார்.
வரைபடம் எழுதித் தமிழகம் கண்டார்.
வறுமை ஒழித்து வளநாடு வென்றார்.

விடிஞ்சதும் அடைஞ்சதும் விதியோ சதியோ!
ஒளிவிளக்கு அணைஞ்சதும் வழிமுடிஞ்சக் கதையோ!
கலங்கிய பொழுதில் கலங்கரை விளக்கம்,
நிலவின் ஒளிமுகம் அம்மாவின் உதயம்.

அம்மாவின் ஆட்சி அன்பின் சாட்சி.
பசிப்பிணி நீங்கிய பாமரன் மீட்சி.
அம்மா எம்ஜியார் அமரர்கள்,
அவர் வாழுந் தெய்வங்கள்.
சுபராசி எடப்பாடித் தவவாசியார்
அவர்வழித் தமிழாட்சி சமர்ப்பணம்.

கொ.பெ.பி.அய்யா.







Sunday, 2 March 2025

எம்ஜியார் அம்மா

ஏது வெற்றிடம்!

எம்ஜியார் அம்மா மொத்த வடிவம்,
அம்சமே அவராக நிறம்பிய முழுஇடம்.
இருவர் இடமும் நிறைவிடம் பழனிச்சாமியிடம்.
இடமொன்றிய ஒருமுகம் திருமுகம் எம்ஜியாரம்மா.

கற்றும் பெற்றும் முற்றிய
அனுபவம்,
பெற்றிட்ட எடப்பாடியார் பொதுச்செயலர்.
கொற்றிடம் இங்கே ஒன்றதுவே அதிமுக,
கொற்றவர் எடப்பாடியார் வெற்றியார் வாழ்கவே!

தேனியில் கண்டது திரண்டது தமிழகம்.
கணக்கியல் சொன்னதுக் காட்சி நிறைவிடம்.
அம்மாவின் கனவு ஆயிரம் ஆண்டுகள்,
சும்மானாச் சொல்லல்ல சூழுரைச் சான்றுகள்.

ஏது வெற்றிடம் இன்னுமாத் தமிழிடம்!
சூதது செய்வாரின் சூதகச் சொல்விடம்.
சூதுவாதில்லா அதிமுக தொண்டர் களம்,
தோதாகத் தானாகத் தன்தலைமைத் தான்தேரும்.

தனைஇயக்குந் தன்னியக்கம்
தனிவழித் தான் இயங்கும்.
வினையாற்றி முனைவோரை 
தனையாற்ற முன்னிறுத்தும்
இணைவோரைத் தன்னிறுத்தும்.
அணைவோரையும் தான்பொருத்தும்.
முடிவில்லா இயக்கமிது
தொடருங்கோடிக் காலமிது.
விடியலாய் விடியுந் தொடர்
கடைவில்லா இயக்கமிது.

கொ.பெ. பி. அய்யா.