Sunday, 15 November 2015

தமிழ் மகளே தலைமகளே!

கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!

தமிழ்மகளே! தலைமகளே! வா!வா!
கமழுந்தமிழ் கலைமகளே வா!வா!
தமிழகத்தின் சுதந்திரமே வா!வா!
அமிழ்தமே அனைத்துயிரே வா!வா!

தங்கத் தாரகையே வா!வா!
சிங்கப் போர்குணமே வா!வா!
காவிரித் தாயே வா!வா!
பூ விரித்தாயே வா!வா!

தமிழான தனியரசி வா!வா!
தரணிக்கு வல்லரசி வா!வா!..
சிமிலுடைத்து செருக்கொழித்தாய் வா!வா!
தமிழனினமே தலைநிமிர்ந்தோம் வா!வா!

உலகத்தின் திலகமே வா!வா!
விலகுமிருள் விடியலே  வா!வா!
குலமுயர்த்துங் குலமகளே வா!வா!
பலமருளி பகையழித்தாய் வா!வா!

ஒற்றுமையின் பற்றேநீ வா!வா!
பற்றுணர் பண்பேநீ வா!வா!
மாற்றாரும் போற்றுந்தாய் வா!வா!
வேற்றுமை நீற்றுந்தாய் வா!வா!

காரான கருணையே வா!வா!
நேரான நெறியேநீ வா!வா!
சீராளும் சிறப்பேநீ வா!வா!
பாராளும் பிறப்பேநீ வா!வா!

அம்மாநீ அர்த்தமே வா!வா!
அன்னையே அடையாளமே வா!வா!
தாயேநீ தமிழேநீ வா!வா!
நீயேநீ நிலையரசே வா!வா!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment