Wednesday, 31 March 2021

நல்லாத்தானே போகிறது.

நல்லாத்தானே போகிறது
நம்ம தமிழ் நாடு.
எடப்பாடி ஆட்சியிலே
என்ன குறை பாடு?

பேசாத பேச்சை எல்லாம்
கூசாமல் பேசுறாங்க.
நாசமா போகத்தானோ!
வீசுறாங்க வார்த்தைகளை.

விவசாயி வாழத்தானே
விவசாயி முதல்வரானார்.
அவசியம் அவர்தானே
தவசியம்மா புதல்வரே.

விளாத்திகுளம் தொகுதிக்கே
சிலாக்கியம் சின்னப்பரே.
வாக்களித்து ஆதரிப்போம்.
ஆக்கம்பெற தேர்ந்தெடுப்போம்.

கொ.பெ.பி.அய்யா.




Tuesday, 23 March 2021

பாரிவள்ளல் எடப்பாடியார்.

வாரி வழங்கும் பாரிவள்ளல்
மாரி புகழ் எடப்பாடியார்.
ஏழை பாழை தோழரவர்
வாழும் உழவர் காவலவர்.