Saturday, 22 August 2020

நன்றி!நன்றி!நன்றி!

தம்பி வெம்பூரார் நம்பியவர்கு,
நம்பி ஈந்த பணியதற்கு;
மாவட்ட இணைச் செயலதற்கு:
ஆணையிட்ட கழகம் போற்றி!

புரட்சி யென்னும் புகழதற்கு,
சரித்திரம் எம்ஜியாரம்மா அவர்கு;
பேராளும் எடப்பாடி பன்னீரார்கு:
சமர்ப்பணம் நன்றி!நன்றி!

தேர்ந்து உவந்த ஏந்தல்தகு
கூர்ந்த செம்மல் மாண்புமிகு;
அமைச்சர் வெகு கடம்பூரார்கு;
சமர்பித்தோம் நன்றி!நன்றி!

விளாத்திகுளம் மக்கள் தொகுதி,
உளம்வாழும் இளம் வழுதி;
பொற்கால செயல் மிகுதி;
நற்பேர் சின்னப்பர்க்கு நன்றி!நன்றி!

கொ.பெ.பி.அய்யா. உள்ள

Wednesday, 19 August 2020

பொய் விளக்கும் சுதந்திரம்.

கட்சி மாறிகள்.

நிலம் தேடும் நாடோடிகள்,
விலையாகும் கொள்கை மாறிகள்.
குளம் தேடும் மீன்கொத்திகள்,
களம் ஆடும் அரசியல்வாதிகள்.

குச்சி தோறும் பட்சிகள்,
கட்சி தாவும் ஒற்றர்கள்.
அரசியல் மேடைப் பேச்சு,
விரசியல் மேலுப் பூச்சு.

வீசிய தடித்த சொற்கள்
பாசத்தின் உச்சம் என்பார்.
வேசியெனக் கூச மாட்டார்.
வசையும் வாழ்த்தும் என்பார்.

திக்கறியா திசை மாறிகள்.
மக்கள் பாவம் அப்பாவிகள்.
எக்கணம் எவர் எங்கோ!
வெக்கம் கெட்ட அரசியல்.

நேசம் எல்லாம் வேசமோ!
வேசி மொழி அரசியலோ!
பதிவான முழக்கம் எல்லாம்:
சுதந்திரம் விளக்கும் பொய்யோ!

கொ.பெ.பி.அய்யா.