Monday 29 October 2018

கனவு கண்டேன்.

கனவு கண்டேன்.

கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்-அம்மா
கனவு நிறைவேறி வர
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன். (கனவு)

தமிழன் தலை நிமிர்ந்து எழ
கனவு கண்டேன் அவன்
தலைமை அமர்ந்த உலகை
கனவு கண்டேன்.
அஞ்சி எவர் முன்னும் இனி
கெஞ்சியும் தொங்கும் இழி
ஒஞ்சும் கொடுமை ஒழிய
கனவு கண்டேன்(கனவு)
                   
ஏழ்மை என்னும் தாழ்மை
கீழ்மை என்பார் இல்லா
எல்லாம் சமமாய் மேன்மை
கனவு கண்டேன்.
நதிகள் கைகள் கோர்த்தோடி
நாடும் பசுமை போர்த்தியாடி
தொழில்கள் மையம் தமிழகமாய்
கனவு கண்டேன்(கனவு)
                   
ஆணும் பெண்ணும் பேதமில்லை
பேணும் உரிமை வாதமில்லை
தோணும் எண்ணம் சகோதரமாய்
கனவு கண்டேன்.
மனிதம் என்ற சொல்லுக்கு
புனிதம் தந்த அன்னைக்கு
உலகம் போற்றி வாழ்த்தவே
கனவு கண்டேன்(கனவு)
                   
கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment